×

பி குரூப்பில் சூப்பர் 12 வாய்ப்பு யாருக்கு? ஸ்காட்லாந்து, ஓமன், வங்கதேசம் கடும் போட்டி

அல் அமரத்: டி.20 உலக கோப்பை தொடரில் தகுதி சுற்றில் பி பிரிவில் இன்றுடன் போட்டிகள் முடிகின்றன. இன்று மாலை 3.30 மணிக்கு ஓமனின் அல்அமரத் மைதானத்தில் நடக்கும் போட்டியில் வங்கதேசம்-பப்புவா கியூ கினியா, இரவு 7.30 மணிக்கு ஓமன்-ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த பிரிவில் ஸ்காட்லாந்து 2 போட்டிகளிலும் வென்றுள்ளது. ஓமன், வங்கதேசம் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. பப்புவா 2 போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ளது.

ஓமனுக்கு எதிரான இன்றைய போட்டியில் ஸ்காட்லாந்து அணி வெற்றிபெற்றால் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும். மாறாக ஓமன் மற்றும் இலங்கை அணிகள் வெற்றி பெற்றால் 3 அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது ரன் ரேட் அடிப்படையில் 2 அணி சூப்பர் 12 சுற்று வாய்ப்பை பெறும். இதனால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Scotland ,Oman ,Bangladesh , Who has the Super 12 chance in Group B? Scotland, Oman, Bangladesh Tough competition
× RELATED இந்தியா- ஸ்காட்லாந்து அணிகள் துபாயில் இன்று பலப்பரீட்சை