மும்பையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வீட்டில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் ரெய்டு..!!

மும்பை: மும்பையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வீட்டில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், போதைப்பொருள் வழக்கில் கைதான நிலையில் சோதனை நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே சொகுசு கப்பலில் போதை பொருள்கள் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் பாலிவுட் நடிகர் ஹாருக்கானின் மகன் ஆர்யன் கான் அக்டோபர் 3ம் தேதி கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த வழக்கில் ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தாமேச்சா உள்ளிட்டோரை இன்று வரை 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் தொடர்ந்த ஜாமின் மனுவும் நேற்று நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலையில் தந்தை ஷாருக்கான், ஆர்யன் கானை நேரில் சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேசினார்.

இந்த சந்திப்பிற்கு பிறகே ஷாருக்கான் வீட்டில் ரெய்டு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் 4 போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பிரபல நடிகை அனன்யா பாண்டே வீட்டிலும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆர்யன் கானின் வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றத்தில் அனன்யா பெயர் இடம்பெற்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

Related Stories:

More
>