கோவை - திருச்சி ரோடு மேம்பால பணிக்காக ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு

கோவை:  கோவை-திருச்சி ரோடு மேம்பாலம் பணிக்காக வாலாங்குளம் பைபாசில் இறங்கும் தளம் அமைக்கப்பட உள்ளதால், பழைய சுங்கம் ஏரிமேடு பகுதியில் இருந்த 32 ஆக்கிரமிப்பு வீடுகளை அதிகாரிகள் நேற்று இடித்தனர்.  கோவை திருச்சி ரோடு ராமநாதபுரம் முதல் சுங்கம் வரை நான்கு வழி மேம்பாலம் கட்டுமான பணிகள் கடந்த 2019 மார்ச் மாதம் துவங்கப்பட்டது. இதில், ராமநாதபுரம் பகுதியில் இருந்தும் வரும் வாகன ஓட்டிகள் சுங்கம் சந்திப்பில், வாலாங்குளம் பைபாஸ் சாலையில் இறங்கும் வகையில், இறங்கு தளம் அமைக்கப்படுகிறது. இதற்காக தூண்கள் அமைக்கப்பட்டு மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதில், வாலாலங்குளம் பைபாசில் இறங்கும் தளம் அமைக்கப்பட உள்ள நிலையில், ஏரிமேடு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்ய மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் காலஅவகாசம் அளித்தனர்.

மேலும், அவர்களுக்கு புல்லுகாடு பகுதியில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், பலர் வீடுகளை காலி செய்யாமல் இருந்து வந்தனர். இந்நிலையில், மாநகராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஏரிமேடு பகுதியில் இருந்த சுமார் 32 ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து நேற்று அகற்றினர். அப்போது, வீடுகளில் இருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் வெளியில் எடுத்து வைத்து வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: