பந்தலூர் டேன்டீ பகுதியில் பழுதடைந்த கழிப்பறைகள்; தொழிலாளர்கள் அவதி

பந்தலூர் : பந்தலூர் அருகே அரசு தேயிலைத்தோட்டம் டேன்டீ  கொளப்பள்ளி, நெல்லியாளம், சேரம்பாடி, சேரங்கோடு பகுதிகளில் டேன்டீ  தொழிலாளர்கள் பயன்படுத்துவதற்கு குடியிருப்பு அருகில் கழிப்பறைகள்  அமைக்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களுக்கு முன் தரமற்ற முறையில்  கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் தற்போது பழுதடைந்து பயன்படுத்த முடியாமல்  உள்ளது. இதனால்  டேன்டீ தொழிலாளர்கள் இயற்கை உபாதைகளுக்கு கழிப்பறையை  பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் மறைவிடங்களுக்கு செல்கிறார்கள். அவ்வாறு செல்லும்போது யானை உள்ளிட்ட வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படுகின்றது. டேன்டீ  நிர்வாகம் தொழிலாளர்கள் குடியிருப்பையொட்டி கழிப்பறைகள் கட்டிக்கொடுத்தால்  மனித வனவிலங்குகள் மோதலை தவிர்க்கமுடியும். எனவே, அரசு மற்றும் டேன்டீ  நிர்வாகம் தொழிலாளர்களுக்கு குடியிருப்புடன் சேர்ந்த கழிப்பறைகள்  கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தொழிலாளர்கள்  வலியுறுத்துகின்றனர்.

Related Stories:

More
>