ட்ரூத் சோஷியல்!: சொந்தமாக சமூக வலைத்தளம் தொடங்கினார் டொனால்ட் ட்ரம்ப்..ட்விட்டர், பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டதால் முடிவு..!!

வாஷிங்டன்: சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு எதிரொலியாக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்-பின் சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தனக்கென பிரத்யோக சமூக வலைத்தள பக்கத்தை தொடக்கி இருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். கடந்த ஜனவரி 6ம் தேதி ட்ரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்ற கட்டுமான கேப்பிடலில் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலுக்கு ட்ரம்ப் தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரின் கணக்குகளை டிவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் இதர சமூக வலைத்தளங்கள் முடக்கின. இதனால் அதிருப்தி அடைந்த டொனால்ட் ட்ரம்ப், சில மாதங்களில் சொந்தமாக சமூக வலைத்தளத்தை உருவாக்க போவதாக கூறினார்.

இதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், டிரம்ப்பின் சமூக வலைத்தளம் விரைவில் செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது. ட்ரூத் சோஷியல் என தனது வலைத்தளத்திற்கு பெயரிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், நவம்பர் மாதம் மத்தியில் அதன் பீட்டா வர்ஷனை பயன்பாட்டிற்கு கொண்டுவரவுள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், இதன் மூலம் சமூக வலைத்தளங்களுக்கு இடையேயான போட்டியில் ஒரு திருப்பு முனை உருவாகும் என்றும் தெரிவித்திருக்கிறார். ட்விட்டர் போன்ற வலைத்தளங்களில் தாலிபான்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் அதுபோன்ற சமூக வலைத்தளங்களில் அமெரிக்க மக்கள் விரும்பும் ஒரு அதிபர் மௌனமாக்கப்படும் உலகில் நாம் வாழ்ந்து வருகின்றோம் என்றும் அவர் விமர்சித்திருக்கிறார்.

Related Stories: