சுந்தம்பட்டி கூட்டுறவு கடன் சங்க புதிய கட்டிடத்தை திறக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை அருகே சந்தம்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட கூட்டுறவு கடன் சங்க புதிய கட்டிடத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள சுந்தம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஏறத்தாழ 3 ஆயிரம் உறுப்பினர்களை கொண்டுள்ளது. இங்கு பயிர் கடன், விவசாய நகை கடன், வட்டியுடன் கூடிய நகைக்கடன், அடமானக் கடன், மகளிர் சுய உதவி குழு கடன் என பலதரப்பட்ட கடன்கள் வழங்கி சிறப்பாக லாபத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதற்கென புதிய கட்டிடம் கட்ட அரசு பல லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடம் கட்டி முடிக்கபட்டுள்ளது. புதிய கட்டிடத்தை உடனே திறக்க வேண்டும் எனவும், பயனற்ற நிலையில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து விட வேண்டும். இல்லையெனில் தற்போது பெய்து வரும் மழையினால் யார் மீதும் இடிந்து விழுந்து உயிர்பலி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. என பழைய கட்டிடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Related Stories:

More
>