திருத்தணி கோயில்களில் அன்னாபிஷேகம்

திருத்தணி: திருத்தணி அடுத்த, நாபளூர் காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோயிலில், நேற்று நடந்த அன்னாபிஷேகம் விழாவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  காலை, 11:00 மணிக்கு, யாகசாலையில் 9 கலசங்கள் வைத்து, நவகலச பூஜை, ஹோமம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு மூலவருக்கு அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. அதேபோல், திருத்தணியில் உள்ள, சதாசிவ லிங்கேஸ்வரர், வீரட்டீஸ்வரர், தாடூர் கடலீஸ்வரர், அகூர், அகத்தீஸ்வரர், பெரியக்கடம்பூர் பெரிய கடம்பவன நாதர், திருக்குளம் அருகே உள்ள ஈஸ்வரன் உள்பட திருத்தணி தாலுகாவில் உள்ள, அனைத்து சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது.

 தாடூர் கடலீஸ்வரர் கோயிலில் நடந்த அன்னாபிஷேக விழாவில், மாநில கல்வி துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், பா.ஜ மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர். ஜானகிராமன், மாநில அரசு தொடர்பு தலைவர் எம். பாஸ்கர நாயுடு, சென்னை மேற்கு  அரசு தொடர்பு அலுவலர் கோவிந்தராஜ், திருவள்ளூர் மேற்கு வீரபிரம்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: