ஆர்.கே.பேட்டை பகுதியில் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந் நிலையில் ஆர்.கே. பேட்டை சுற்று வட்டார பகுதியில் நேற்று மதியம் முதல் சுமார் இரண்டு மணி நேரம் பலத்த மழை கொட்டித் தீர்த்து. இதனால் தாழ்வான பகுதிகளில், தெருக்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அம்மையார்குப்பத்தில் கன மழைக்கு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றது. மழை வெள்ளம் பல்வேறு பகுதிகளில் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். அதிகாரிகள் மற்றும்  உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மழை நீர் அகற்றும் பணிகளை முடக்கிவிட்டனர்.

Related Stories:

More
>