×

கனமழை எதிரொலி: சதுரகிரி கோயிலுக்கு சென்ற 120 பேர் தங்க வைப்பு

வத்திராயிருப்பு: ஐப்பசி மாத பவுர்ணமி தரிசனத்திற்காக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். முதல் நாள் மழை பெய்ததால் 120 பேரை மலையிலிருந்து இறங்க விடாமல் கோயில் பகுதியிலேயே பாதுகாப்பாக தங்க வைத்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரியில் உள்ளது சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில். இங்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என மாதத்திற்கு 8 நாட்கள் அனுமதிக்கப்படுகிறது.

கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளால் ஆடி பவுர்ணமிக்கு பின் கடந்த அக். 18ம் தேதி பிரதோஷத்தில் இருந்து ஐப்பசி பவுர்ணமியான நேற்று வரை 3 நாட்களுக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் மாஸ்க் அணிந்து வந்த பக்தர்களுக்கு மட்டும் காய்ச்சல் பரிசோதனை செய்து, கைகளில் கிருமிநாசினி தெளித்து மலையேற அனுமதித்தனர். நேற்று முன்தினம் பிற்பகலில் சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப்பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் கோயிலில் இருந்து சுமார் 120 பக்தர்களை கீழே இறங்க விடாமல் அங்கேயே இரவு முழுவதும் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு வழங்கினர்.

இவர்கள் நேற்று காலையில் மலையிலிருந்து இறங்கி வந்தனர். நேற்று ஐப்பசி பவுர்ணமியையொட்டி அதிகாலை 4 மணி முதலே மதுரை, கோவை, சேலம், திருச்சி, சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் குவிந்தனர். காலை 6.40 மணியளவில் பக்தர்கள் மலையேறி கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Tags : Temple of Chessagiri , Echo of heavy rain: 120 people who went to the Sathuragiri temple gold deposit
× RELATED கனியாமூர் பள்ளி சம்பவம் தொடர்பான...