கல்விக்கடன் ரத்து குறித்து அரசு ஆய்வு: நிதி அமைச்சர் தகவல்

மதுரை: மதுரையில் நேற்று கல்விக்கடன் மேளா நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சங்க காலத்தில் இருந்து மதுரை கல்வியில் சிறந்து விளங்குகிறது. பல நாடுகளில் 15 வங்கிகளில் பணியாற்றி இருக்கிறேன். மாணவர்களுக்கு அடிப்படை கட்டமைப்பு கல்வி தான். 1987ல் ஒரு காரணத்தால் பணம் புரட்ட முடியாமல் வங்கியில்  ரூ.1 லட்சம் கடன் பெற்று அமெரிக்கா சென்றவன் நான்.

அங்கு பல கோடி சம்பாதித்து, பல கோடி வரி கட்டி இருக்கிறேன். கல்லூரி மாணவர்களுக்கான கல்விக்கடனை ரத்து செய்வது குறித்து முதல்வர் பரிந்துரையின் பேரில் ஆய்வு நடைபெற்று வருகிறது’’ என்றார்.

Related Stories: