நெல்லை மாவட்டத்தில் 90 வயது மூதாட்டி, 22 வயது இளம்பெண் ஊராட்சி தலைவர்களாக பொறுப்பேற்பு

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 90 வயது மூதாட்டி, பட்டதாரி வாலிபர், 22 வயது இளம்பெண் இன்ஜினியர் ஆகியோர் ஊராட்சி தலைவர்களாக நேற்று பொறுப்பேற்றனர். நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சி தலைவியாக 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுபோல், கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி தலைவியாக இன்ஜியரிங் பட்டதாரியான 22 வயது இளம்பெண் சாருலதா மற்றும் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மேலபுத்தனேரி ஊராட்சி தலைவராக பட்டதாரி வாலிபர் மனோஜ்குமார் (22) ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

இவர்கள் 3 பேரும் நேற்று ஊராட்சி தலைவர்களாக சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகங்களில் பொறுப்பேற்றனர். பெருமாத்தாளுக்கு வருவாய் ஆய்வாளர் வானமாமலை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதற்கான கோப்பில் அவர் கையெழுத்திட்டார்.

Related Stories: