‘சென்னையில் உள்ள 403 அம்மா உணவகத்திலும் சப்பாத்தி வழங்கப்படும்’

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: அம்மா உணவகங் களுக்கான கோதுமை தனியார் ஆலைகளில் மாவாக அரைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயந்திர கோளாறு காரணமாக கடந்த 10 நாட்களாக ஒரு சில மண்டலங்களில் உள்ள ஒரு சில அம்மா உணவகங்களில் மட்டும் சப்பாத்தி வழங்குவதற்கு  பதிலாக இரவு நேரத்தில் தக்காளி சாதம் வழங்கப்பட்டது. தனியார் ஆலையில் ஏற்பட்ட இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டு அனைத்து அம்மா உணவகங்களிலும் தற்பொழுது சப்பாத்தி இரவு வேளைகளில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 403 அம்மா உணவகங்களில் பணியில் உள்ள எந்த ஒரு சுய  உதவி குழு உறுப்பினரும் பணியில் இருந்து நீக்கப்படவில்லை. பல அம்மா உணவகங்களில் 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் மற்றும் பல அம்மா உணவகங்களில் பற்றாக்குறையுடனும் உறுப்பினர்கள் உள்ளனர்.  அனைத்து அம்மா உணவகங்களிலும்  விற்பனைக்கு ஏற்ப சமச்சீராக இருக்கும் வகையில் உறுப்பினர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>