ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிப்பிரமாணம் எடுக்காதவர்கள் நாளை எடுத்துக்கொள்ளலாம்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் மற்றும் 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தல்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 20ம் தேதி (நேற்று) பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளா நிலையில் நாளை (22ம் தேதி) மறைமுகத் தேர்தல் நடவடிக்கைக்கு முன்பாக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டு மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் பங்குபெறலாம். அவ்வாறும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளாதவர்கள், 1994ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் படி அவரது பதவிக்காலம் துவங்குகிற நாளான 20.10.2021ல் இருந்து மூன்று மாதங்களுக்குள்ளாகவோ அல்லது முதல் மூன்று கூட்டங்களில் ஒன்றிலோ இதில் எது முந்தையதோ அதற்குள்ளாக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: