2 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை  சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் காயமடைந்த வீரர் ஒருவர் உயிரிழந்தார். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட டிராட் பகுதியில் பாதுகாப்பு படையினர்  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

இதனை தொடர்ந்து வீரர்கள் நடத்திய என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட இருவரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.  தீவிரவாதிகளில் ஒருவன் அதில் ஹாவானி என அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன், உத்தரப்பிரதேசத்தின் சஹாரன்பூரில் கார்பென்டரை கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடையவன். இந்த சம்பவத்தின்போது பாதுகாப்பு படைவீரர்கள் 3 பேர் காயமடைந்தனர்.

உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில் சிகிச்சை பலனின்றி வீரர் ஒருவர் உயிரிழந்தார். கடந்த இரண்டு வாரங்களில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>