ராணுவ வாகனம் வெடித்து சிதறியது; அடுத்தடுத்த குண்டுவெடிப்பில் சிரியாவில் 27 பேர் பரிதாப பலி: 4 ஆண்டுக்குப் பின் தலைநகரில் பயங்கரம்

டமாஸ்கஸ்: சிரியாவில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பில் 27 பேர் பலியாகினர். தலைநகர் டமாஸ்கஸில் 4 ஆண்டுக்குப் பின் ராணுவ வாகனத்தின் மீது நடத்த குண்டுவெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளால் உள்நாட்டு போர் பல பகுதிகளில் நடந்து வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு தீவிரமடைந்த உள்நாட்டு போரினால் இதுவரை சுமார் 3.5 லட்சம் மக்கள் இறந்துள்ளனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

இப்போதும் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில், தலைநகர் டமாஸ்கஸில் நேற்று காலை ராணுவ வீரர்களை ஏற்றி வந்த வாகனத்தை குறிவைத்து சாலையில் 2 குண்டுகள் வெடித்தன. இதில் 14 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2017ம் ஆண்டுக்குப் பிறகு தலைநகர் டமாஸ்கசில் நடந்துள்ள பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் இது. தலைநகர் முழுவதும் அரசுப்படை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. இதற்கு பதிலடியாக அரசு தரப்பு படையினர், தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள அரிஹா நகரில் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் பள்ளிக் குழந்தைகள் 3 பேர் உட்பட 13 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

Related Stories: