ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா- பிரான்ஸ் மோதல்

புதுடெல்லி: இந்தியாவில் நடைபெற உள்ள ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடருக்கான அட்டவணையை சர்வசேத ஹாக்கி  கூட்டமைப்பு (எப்ஐஎச்) நேற்று வெளியிட்டது. ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரத்தில் நவ.24ம் தேதி தொடங்கும் இப்போட்டியின் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா, பிரான்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்தியா இடம் பெற்றுள்ள பி பிரிவில் கனடா, போலந்து, பிரான்ஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன. ஏ பிரிவில் பெல்ஜியம், சிலி, மலேசியா, தென் ஆப்ரிக்கா அணிகளும், சி பிரிவில் கொரியா, நெதர்லாந்து, ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் டி பிரிவில் அர்ஜென்டினா, எகிப்து, ஜெர்மனி, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன.

கொரோனா காரணமாக இந்தியா வர இங்கிலாந்து மறுத்துவிட்டதால், அதற்கு பதில்  போலந்து பங்கேற்கிறது. இந்திய அணி தனது 2வது போட்டியில் நவ.25ம் தேதி கனடாவுடனும், நவ.27ம் தேதி போலந்துடனும் விளையாடுகிறது. தொடர்ந்து காலிறுதி ஆட்டங்கள் டிச.1ம் தேதியும், அரையிறுதி ஆட்டங்கள் டிச.3, 5 தேதிகளிலும், இறுதி ஆட்டம் டிச.6ம் தேதியும் நடக்க்க உள்ளன.

ஜூனியர் மகளிர் உலக கோப்பை ஹாக்கி போட்டி டிச.5ம் தேதி முதல் டிச.16ம் தேதி வரை  தென் ஆப்ரிக்காவில் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்கும் 16 அணிகளில், இந்தியா இடம் பெற்றுள்ள சி பிரிவில் அர்ஜென்டினா, ஜப்பான், ரஷ்யா அணிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் ஏ பிரிவில் அயர்லாந்து, கொரியா,  நெதர்லாந்து, ஜிம்பாப்வே, பி பிரிவில் பெல்ஜியம், கனடா, இங்கிலாந்து, உருகுவே, டி பிரிவில் ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா, ஸ்பெயின், அமெரிக்கா இடம் பெற்றுள்ளன.

Related Stories: