போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கானுக்கு ஜாமீன் மறுப்பு

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க மும்பை சிறப்பு நீதிமன்றம் மறுத்து விட்டது. இதைத்தொடர்ந்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய ஆர்யன் கான் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆர்யன் கான் ஜாமீன் கோரி மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை மாஜிஸ்திரேட் மனுவை நிராகரித்துவிட்டார். இதனை தொடர்ந்து போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.வி. பாட்டீல், ‘வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜாமீன் வழங்குவது, குற்றம்சாட்டப்பட்ட நபர் சதித்திட்டம் தீட்டுவதற்கு இடமளிக்கலாம். எனவே, இவரின் ஜாமீன் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது’. என உத்தரவிட்டார்.

Related Stories:

More
>