நேரு- காந்தி குடும்பத்தை சார்ந்திடாத வெளிநபர் காங்கிரஸ் தலைவராக வேண்டும்: ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே கருத்து

போபால்:  காந்தி குடும்பத்துக்கு வெளியே இருந்து காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் தேர்ந்தெடுக்கபடவேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகின்றார். கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 21 மற்றும செப்டம்பர் 20ம் தேதி நடைபெறும் என்ற கடந்த வாரம் காங்கிரஸ் அறிவித்து இருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் குறித்து ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே கருத்து தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேசம், போபாலில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியால் அதன் தலைவரை கண்டுபிடிக்க முடியவில்லை. 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தவுடன் ராகுல்காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். ராகுல்காந்தி மீண்டும் கட்சியின் தலைவராக முடியாது. அதற்கு பதிலாக நேரு- காந்தி குடும்பத்தை சார்ந்திடாத வெளி நபர் ஒருவர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’.’ என்றார்.

Related Stories: