கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை: உயிரிழந்தவர்களுக்கு சட்டமன்றத்தில் அஞ்சலி

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த வாரம் பெய்த கன மழையால்  நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.  ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.  அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்  அடுத்த 3 நாட்களுக்கு மீண்டும் மழை பெய்யும்  என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கேரள சட்டசபை கூட்ட தொடரில், நேற்று மழையால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கூட்டம் நடத்தப்பட்டது.

அப்போது முதல்வர் பினராய் விஜயன் பேசியதாவது: ‘கேரளாவில் அடுத்தடுத்து இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால்தான் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி கடந்த ஒரு வாரத்தில் 39 பேர் மரணமடைந்தனர். மழையால் பலியானவர்களின் குடும்பத்துக்கு ஏற்பட்ட துக்கம் கேரள மக்கள் அனைவருக்கும் ஏற்பட்ட ஒரு துயர சம்பவம் ஆகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு துணை நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: