ஐஎம்எப் பதவில் இருந்து கீதா கோபிநாத் விலகல்

வாஷிங்டன்: சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணராக பதவி வகிக்கும் கீதா கோபிநாத் அப்பதவியிலிருந்து அடுத்தாண்டு விலக இருப்பதாக அறிவித்துள்ளார். மைசூரில் பிறந்த இந்திய அமெரிக்கரான கீதா கோபிநாத், 2019ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக பணியில் சேர்ந்தார்.

இந்நிலையில், கீதா கோபிநாத்,  தலைமை பொருளாதார நிபுணர் பொறுப்பில் இருந்து 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் பதவி விலகுவதாக நேற்று அறிவித்தார். இதையடுத்து, அவர் மீண்டும் ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் தனது பணியைத் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>