டிரெஸ்சிங் ரூமில் கொஞ்சம் சகஜமான சூழ்நிலை - ஷகிப் அல் ஹசன்

அல் அமீரத்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த போட்டியில் ஓமன் அணியை வங்கதேச அணி, 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முன்னதாக ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த வங்கதேச அணி, ஓமனுக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரின் மெயின் சுற்றுக்கான தகுதியில் உள்ளது.

ஓமனுக்கு எதிரான போட்டியில் ஷகிப் அல் ஹசன், ஆல்ரவுண்டராக ஜொலித்தார். 29 பந்துகளில் 42 ரன்களை விளாசிய அவர், பின்னர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் கூறுகையில், ‘‘இந்த வெற்றிக்கு பின்னர் எங்களுடைய டிரெஸ்சிங் ரூமில் கொஞ்சம் சகஜமான சூழ்நிலை நிலவும். கொஞ்சம் டென்ஷன் குறைந்திருக்கிறது. ஸ்காட்லாந்துக்கு எதிரான தோல்வி, எங்களுக்கு பெரும் பாதிப்புதான். ஆனால் அவர்கள் திறமையாக ஆடினார்கள் என்பதை மறுக்க முடியாது.

இந்தப் போட்டியில் எங்கள் அணியின் ஒட்டுமொத்த பந்து வீச்சும் திருப்திகரமாக இருந்தது. ஆனாலும் சிரமப்பட்டுத்தான் வென்றிருக்கிறோம். முதலிலேயே கூடுதலாக 25 ரன்களை சேர்த்திருக்க வேண்டும். அடுத்து பப்புவா நியூ கினியாவை வெல்ல வேண்டும். அதில்தான் எங்கள் அணியின் ஒட்டுமொத்த கவனமும் உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>