காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் 10வது நாளாக தேடுதல் வேட்டை : இதுவரை 15 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!

காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் ஷோபியானில் நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.காஷ்மீரின் ரஜோரி, பூஞ்ச் மாவட்ட எல்லைகள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவது கடந்த ஜூன் மாதம் முதல் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், காட்டுப் பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் ஊடுருவி இருப்பதாக உளவுத்தகவல்கள் கிடைத்தன.

இதன் அடிப்படையில் தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள சுகன் குக்கிராமத்தின் டிராகட் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே 10வது நாளாக இன்றும் துப்பாக்கி சண்டை நீடித்தது, தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தாக்குதலின் போது ஒரு பாதுகாப்பு படை வீரர் வீரமரணம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காஷ்மீர் ஐ.ஜி. விஜய் குமார் கூறுகையில்,இன்றைய தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவர் அடில் ஆஹ் வானி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர், கடந்த வாரம் புல்வாமாவில் தொழிலாளரை கொன்றதில் சம்பந்தப்பட்டுள்ளார். மேலும், கடந்த 2 வாரத்தில் மட்டும் 15 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

Related Stories:

More
>