சூரியனை பார்த்து... அத ஓபனா சொல்ல முடியாது : சசிகலாவை விமர்சித்த எடப்பாடி!!

சென்னை : அதிமுக பொது செயலாளர் என்று சசிகலா கூறி கொள்வது பற்றி எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக ஆளுநருடனான சந்திப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக பொது செயலாளர் என சசிகலா கூறி கொள்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பழனிசாமி, சசிகலாவிற்கும் அதிமுகவிற்கும் சம்பந்தம் இல்லை. இதை பலமுறை சொல்லிவிட்டேன். கட்சியில் இல்லாத அவரை பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்.

சூரியனை பார்த்து... (சூரியனை பார்த்து நாய் குரைத்தால் நாய்க்கு தான் பாதிப்பு. அத நான் ஓபனா சொல்ல முடியாது. அதிமுகவின் கொடியை பயன்படுத்தியதற்காக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. பொய்யான கல்வெட்டு வைத்த சசிகலா மீது அதிமுக நடவடிக்கை எடுக்கும்.,சசிகலா மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.

சசிகலா பொதுச் செயலாளர் என சொல்லி கொள்வதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறிய பழனிசாமி தேர்தல் ஆணையம், நீதிமன்றம் அனைத்தும் நாங்களே அதிமுக என்று உறுதிப்படுத்திவிட்டது என்றும் பொழுது போகவில்லை என்பதற்காக சசிகலா ஏதோ செய்து கொண்டு இருப்பதாகவும் கிண்டல் செய்தார். அதிமுக பொது செயலாளர் என குறிப்பிட்டு தனது பெயர் பொறித்த கல்வெட்டை சசிகலா திறந்து வைத்தது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே போல, அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரில் சசிகலா அந்த கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்று எழுதினார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

Related Stories:

More
>