ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.45 லட்சம் மோசடி செய்த முதியவர் கைது

சென்னை: ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.45 லட்சம் மோசடி செய்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது மகனுக்கு ரயில்வே வேலை வாங்கி தரக்கூறி வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வரும் வேளச்சேரியை சேர்ந்த சிவராமன்(62) என்பவரிடம் திருத்தணியை சேர்ந்த கிருஷ்ணன் பணம் கொடுத்துள்ளார். 3 மாதங்களில் வேலை வாங்கித்தரப்படும் எனக் கூறி சிவராமன் ரூ. 45 லட்சத்தை பெற்று தலைமறைவாகியுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சிவராமனை தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

Related Stories:

More
>