நீருக்குள் சென்று தாக்கும் நவீன ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதை ஒப்புக்கொண்டது வடகொரியா: அண்டை நாடுகள் கண்டனம்

வடகொரியா: நீருக்குள் சென்று தாக்கும் நவீன ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதை வடகொரியா ஒப்புக்கொண்டுள்ளது.சர்வதேச அமைப்புகள் மற்றும் அண்டை நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. நேற்று அதிகாலை நீருக்குள் சென்று எதிரி நாட்டு நீர்மூழ்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டதாக தென்கொரியா,ஜப்பான் ஆகிய அண்டை நாடுகள் குற்றம்சாட்டின.

வடகொரியா நீர்மூழ்கி கப்பலில் இருந்து இந்த ஏவுகணையை சோதனை செய்திருப்பதாக கூறியுள்ளது. வடகொரியாவின் தொடர் ஏவுகணை பரிசோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வடகொரியாவின் அண்டை நாடுகளான ஜப்பானும் தென்கொரியாவும் வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. ஆயுத சோதனை குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு மவுனம்காத்து வந்த வடகொரியா தற்போது நீருக்குள் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை நடத்தியதை ஒப்புக்கொண்டுள்ளது.

Related Stories: