ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயரை மாற்றி புதிய பெயரில் ரீபிராண்டிங் செய்ய திட்டம்

கலிஃபோர்னியா: ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயரை மாற்றுவதற்கு தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனம் சமீப காலமாக பல்வேறு சிக்கல்களில் சிக்கி வருகிறது. இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்றவை கூட ஃபேஸ்புக்கின் துணை நிறுவனங்கள். ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயல்பாடுகளால் அமெரிக்காவில் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. இதனிடையே ஃபேஸ்புக்கின் பெயரை மாற்ற அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் புதிய பெயரில் ரீபிராண்டிங் செய்யப்படும் எனவும், ஒற்றை தாய் நிறுவனத்தின் கீழ் அதனுடைய ஒரேயொரு மொபைல் ஆப்பில், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஓகலஸ் உள்ளிட்ட பிற பயன்பாடுகளும் கிடைக்கக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தி வெர்ஜ் என்ற இதழில் வெளியாகியிருக்கும் தகவலின்படி, வரும் அக்டோபர் 28ம் தேதியன்று நடைபெறவிருக்கும் ஃபேஸ்புக்கின் வருடாந்திர கான்ஃபரன்ஸில் மார்க் ஸக்கர்பர்க் இதுகுறித்து பேசக்கூடும் எனவும், ஆனால் அதற்கு முன்னரே அடுத்த வாரத்தில் கூட ஃபேஸ்புக்கின் புதிய பெயர் வெளியாகலாம் எனவும் ஃபேஸ்புக் நிறுவன தகவல்களின் அடிப்படையில் தி வெர்ஜ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: