வடகிழக்கு பருவமழை அக். 26ம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது!: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தகவல்..!!

சென்னை: வடகிழக்கு பருவமழை அக்டோபர் 26ம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழவந்தான், பென்னகரத்தில் தலா 6 செ.மீ. மழை பொழிந்துள்ளது. சாத்தான்குளம் 6, ஏற்காடு, பெலந்துறை, தழுத்தலை ( பெரம்பலூர்), பாபநாசத்தில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வத்திராயிருப்பு, உசிலம்பட்டி, ஜெயம்கொண்டம், வேப்பந்தட்டை, பாடலூரில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது. இதேபோல் விழுப்புரம், கிருஷ்ணாபுரம், சின்கோனாவிலும் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தொடர்ந்து ஊத்தங்கரை, கடம்பூர், திண்டிவனம், கூடலூர் பஜார், வீரகனூர், எடப்பாடி, புதுசாத்திரத்தில் தலா 2 செ.மீ. மழை பெய்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 1 முதல் 19ம் தேதி வரை 149 மீ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 52 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வடகிழக்கு பருவமழைக் காலம் நெருங்குவதை ஒட்டி தமிழகத்தில் கால்வாய்கள் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏரிகளில் மதகுகள் சீரமைப்பு, கரைகளை பலப்படுத்துதல், வரத்து கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை வருகின்ற 26ம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ள தகவலில், வங்கக்கடல், தென் இந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் அக்டோபர் 26ம் தேதி முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசக்கூடும். தொடர்ந்து தென்மேற்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இருந்து விலகி வழக்கிழக்கு பருவமழை வரும் 26ல் தொடங்க வாய்ப்பிருப்பதாக வாய்ப்பிருக்கிறது. வழக்கமாக அக்டோபர் முதல் அல்லது 2வது வாரத்தில் தொடங்கும் பருவமழை இந்த ஆண்டும் தாமதமாக தொடங்குகிறது என்று தெரிவித்தார்.

Related Stories:

More
>