வருசநாடு பகுதியில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி-விவசாயிகள் கவலை

வருசநாடு : வருசநாடு பகுதியில் அதிக அளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டும், போதிய விலையில்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

வருசநாடு பகுதியில் சிங்கராஜபுரம், பசுமலைத்தேரி, செங்குளம், தர்மராஜபுரம், வைகை நகர், குமணன்தொழு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் சின்னவெங்காயம் விவசாயம் நடக்கிறது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் விளைந்த சின்னவெங்காயத்ைத பாதுகாப்பதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கனமழையின் காரணமாக விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி வருகிறது. இந்த தண்ணீரை வெளியேற்ற விவசாயிகள் படாதபாடு படுகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘கடமலை மயிலை ஒன்றியத்தில் அதிக அளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது சின்ன வெங்காயத்தின் விலை ரூ.20 முதல் 25 வரை விலை போய்க் கொண்டிருக்கிறது.  விளைவிக்கப்பட்ட வெங்காயத்தை பாதுகாக்க நாங்கள் படும்பாடு சொல்லி மாளாது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு அதிக அளவில் நிவாரணம் வழங்க வேண்டும், என்றனர்.

Related Stories:

More
>