பச்சை நிறத்தில் கடல்நீர்.. செத்து மிதக்கும் மீன்கள்.. ராமேஸ்வரம் மீனவர்கள் அச்சம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அடுத்த வில்லூண்டி தீர்த்தம் கடல் நீர் பச்சை நிறமாக மாறியதுடன் சிறிய வகை மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். வில்லூண்டி தீர்த்தம் கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் நீர் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பல வகையான சிறிய மீன்கள் செத்து கடற்கரை ஓரத்தில் ஒதுங்கியுள்ளன.

இதனால் மீன்பிடி தொழிலை நம்பி இருக்கும் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய கடல் மீன்வளத்துறை விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

Related Stories:

More
>