நகராட்சி மார்க்கெட் வளாகத்தில் குப்பைகளை அகற்ற கோரிக்கை

ஊட்டி :  ஊட்டி நகராட்சி மார்க்ககெட் வளாகத்தில் மளிகை, காய்கறி கடைகள், துணிக்கடைகள், உர விற்பனை நிலையங்கள், இறைச்சி கடைகள், மொத்த காய்கறி மார்க்கெட் என சுமார் 1300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மார்க்கெட்டிற்குள் பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக 10 நுழைவு வாயில் உள்ளன.இந்நிலையில், மார்க்கெட் வளாகத்தில் நாள்தோறும் சேகரமாகும் குப்பைகள் அகற்றுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆயுதபூஜையன்று குவிந்த குப்பைகள் முறையாக அகற்றப்படவில்லை என வியாபாரிகள் குற்றம்சாட்டினர். இதனால், சில முக்கிய நுழைவுவாயில் பகுதிகளில் குப்பைகள் அப்படியே குவித்து வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக காய்கறி கழிவுகள் அழுகி துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், மார்க்கெட் வளாகத்திற்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.எனவே மார்க்கெட் வளாகத்தில் நாள்தோறும் தூய்மை பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories:

More
>