சர்வதேச எண்ணெய், எரிவாயு நிறுவன தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!: முதலீடு, கூட்டிணைவுக்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடல்..!!

டெல்லி: சர்வதேச எண்ணெய், எரிவாயு நிறுவன தலைவர்கள் மற்றும் வல்லுனர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இதுகுறித்து தகவல்களை வெளியிட்டுள்ள பிரதமர் அலுவலகம், இன்று மாலை 6 மணியளவில் சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன முதன்மை நிர்வாக அதிகாரிகள் மற்றும் வல்லுனர்களுடன் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாட உள்ளதாக கூறியுள்ளது. இந்தியா உடனான முதலீடு, கூட்டிணைவுக்கான வாய்ப்புகள் குறித்தும் அப்போது விரிவாக ஆலோசிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் உற்பத்திக்கான வாய்ப்பை கண்டறிதல், உற்பத்தியை பெருக்குவதற்கான திட்டமிடல், எரிசக்தி சுதந்திரம், எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரம் உள்ளிட்டவை ஆலோசனையின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் வாயுக்களில் மாசு குறைப்பு நடவடிக்கைகள், இயற்கை எரிவாயு மற்றும் கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் திட்டங்கள் குறித்தும் வல்லுனர்களுடன் இன்று மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். 2016ம் ஆண்டுக்கு பின்னர், நடைபெறும் 6வது ஆலோசனை கூட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: