பட்டா மாற்றத்திற்கு லஞ்சம் கேட்டதால் விபரீத முடிவு; ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்டு தற்கொலை

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பட்டா மாற்றத்திற்கு லஞ்சம் கேட்டதால் பூ வியாபாரி ஒருவர் பேஸ்புக்கில் நேரலையாக வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார். நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பூ வியாபாரியான பிரபு தமது பூர்வீக சொத்தை தனியாக பிரித்து பட்டா மாற்றுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசனை அணுகியுள்ளார். அப்போது அவர் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பிரபு அந்த தொகையை கொடுக்க மறுத்ததால் கடந்த ஒருமாத காலமாக அவரை அலைக்கழித்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த வியாபாரி பிரபு தமது மரணத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசனே காரணம் எனக்கூறி பேஸ்புக்கில் நேரலையாக வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார். பேஸ்புக்கில் வீடியோ பார்த்து அங்கு உறவினர்கள் விரைந்து சென்ற போதும் அதற்குள்ளாகவே பிரபு தமது உயிரை மாய்த்து கொண்டார். இதுதொடர்பாக உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பூ வியாபாரி பிரபுவின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

More
>