பெட்ரோல் ரூ200ஐ தொட்டால் பைக்கில் 3 பேர் போக அனுமதி: அசாம் பாஜ தலைவர் சர்ச்சை

கவுகாத்தி: ‘பெட்ரோல் விலை லிட்டர் ரூ.200ஐ தொட்டால், இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிக்க மாநில அரசு அனுமதி வழங்கும்,’ என்று அசாம் மாநில பாஜ தலைவர் பாபேஷ் கலிதா கூறியுள்ள கருத்து சர்ச்சையாகி உள்ளது. அசாம் மாநில பாஜ தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபேஷ் கலிதா தமுல்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுகையில், ‘பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.200 ஆக உயரும் போது, இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணிக்கலாம்.

இருப்பினும், மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும். ,’ என்று கூறியுள்ளார். இவரது இக்கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அசாம் மாநில காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் போபீதா சர்மா கூறுகையில், ‘சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும், பெட்ரோல் விலையை பாஜ அரசு உயர்த்தி கொண்டே செல்கிறது. அதன் பயனை மக்களுக்கு வழங்க அவர்களுக்கு மனமில்லை,’ என்று கூறினார்.

Related Stories: