பெண்ணிடம் நகை பறிப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆயக்கொளத்தூர், பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (35). நேற்று முன்தினம் தமிழ்ச்செல்வி, தனது மொபட்டில் ஸ்ரீபெரும்புதூருக்கு புறப்பட்டார். ஆயக்கொளத்தூர் அருகே சென்றபோது, பின்னால், பைக்கில் ஹெல்மெட் அணிந்து சென்ற 2 பேர், அவரது முதுகில் தட்டினர். உடனே தமிழ்ச்செல்வி மொபட்டை நிறுத்தினார். அப்போது மர்மநபர்கள், அவரது கழுத்தில் இருந்த 6 சவரன் நகையை அறுத்து கொண்டு தப்பினர்.

இதுகுறித்து தமிழ்ச்செல்வி, ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த வாரம், மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற வடமாநில வாலிபர், போலீசாரால் சுட்டு கொலை செய்யபட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தவேளையில், தற்போது மீண்டும் நகைக பறிப்பு சம்பவம் நடந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories:

More
>