கால்நடைகளுக்கு தடுப்பூசி: விவசாயிகள் கோரிக்கை

செங்கல்பட்டு:  அனைத்து விவசாய சாகுபடி பயிர்கள் உற்பத்தி விவசாயிகள் சங்கம் சார்பில், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத்திடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது சம்பா நெல்சாகுபடி செய்யும் நிலை உள்ளது. இதனால், நெற்பயிருக்கு அடி உரமாக டிஏபி மற்றும் யூரியா பயன்படுத்துவது வழக்கம். இந்த உரங்களை தனியார் உரக்கடையில் வாங்க சென்றால் ₹400 குருனை வாங்கினால் மட்டும் டிஏபி  மற்றும் யூரியா வழங்கப்படும் என வலுக்கட்டாயமாக கடை உரிமையாளர்கள் எங்களிடம் திணிக்கிறார்கள்.

இதேபோல்,  ஆண்டுதோறும் கால்நடைகளுக்கு கோமாரி சப்பநோய் தடுப்பூசி செலுத்துவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவை காரணம் காட்டி கால்நடைகளுக்கு  தடுப்பூசி செலுத்தாமல் உள்ளது. அதிக  கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவி ஆடு, மாடுகள் இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உழவர்களின் வாழ்வாதாரமான கால்நடைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பபட்டுள்ளது.

Related Stories:

More
>