மதுரையில் சோக சம்பவம்: தந்தை இறந்தது தெரியாமல் தனியாக இருந்த பெண் மீட்பு

மதுரை: மதுரையில் தந்தை இறந்தது கூட தெரியாமல் இரவு முழுவதும் வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். மதுரை, ஆனையூர் மந்தையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சீனிச்சாமி. இவரது மனநலம் பாதித்த மகள் கிருஷ்ணவேணி (33). இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் சீனிச்சாமி திடீரென உயிரிழந்தார். இது தெரியாமல் கிருஷ்ணவேணி, ஒரு நாள் இரவு முழுவதும் தந்தையின் உடல் அருகிலேயே இருந்துள்ளார்.

நேற்று காலை நீண்ட நேரமாகியும் சீனிச்சாமி வெளியில் வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் இறந்தது தெரிய வந்தது. தகவலறிந்து கூடல்புதூர் போலீசார்சென்று, சீனிச்சாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆதரவற்ற நிலையில் தவித்த கிருஷ்ணவேணியை மீட்டு திருவாதவூரில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

Related Stories:

More
>