வேலூர் தனியார் மருத்துவமனையில் வேலை செய்யும் காதலியை இரவில் சந்திக்க பர்தா அணிந்து சென்ற வாலிபர்: திருடன் என கருதி பொதுமக்கள் தர்ம அடி

வேலூர்: வேலூரில் திருமணமானதை மறைத்து மற்ெறாரு இளம்பெண்ணை காதலித்த வாலிபர், அவரை இரவில் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுக்க பர்தா அணிந்து பெண் வேடத்தில் சென்றார். அவரை திருடன் என கருதி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். ேவலூர் ஓல்டுடவுன் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (28), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. குழந்தைகள் இல்லை. இந்நிலையில்திருமணமானதை மறைத்த அன்பழகன், வேலூர் சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருந்து கொடுக்கும் பிரிவில் வேலை செய்யும் 19 வயது இளம்பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

தினமும் வேலை முடிந்து இரவு 10 மணிக்கு வீடு திரும்பும் அந்த இளம்பெண்ணை வழியில் சந்தித்து அன்பழகன் பேசி வந்தார். இந்நிலையில் காதலியை சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுக்க நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பர்தா அணிந்து பெண் வேடத்தில், சைதாப்பேட்டையில் உள்ள மருத்துவமனை அருகே வேலை முடிந்து வீடு திரும்பும் காதலிக்காக தெருவில் காத்திருந்தார். பின்னர் அங்கும் இங்குமாக தெருவில் நடந்தபடி இருந்தார். அவர் அணிந்திருந்த காலணி, அவரது நடை ஆண் போன்று இருந்ததால் அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்தனர். அவரை சுற்றிவளைத்து, ‘‘நீ யார்? எந்த ஊர்?’’எனக்கேட்டு முகத்தை காட்டும்படி கூறினர். ஆனால் அந்த நபர் பதிலளிக்கவில்லை.

இதையடுத்து அவர் பெண் வேடமிட்ட வாலிபர் என்பது தெரியவந்தது. அவர் திருடுவதற்காக பெண் வேடமிட்டு வந்திருக்கலாம் எனக்கருதிய அப்பகுதி மக்கள் சரமாரியாக தர்ம அடி கொடுத்தனர். இதில் அந்த வாலிபர் படுகாயமடைந்தார். தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார், விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

விசாரணையில் கிளினிக்கில் இருந்து வீடு திரும்பும் காதலியை சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக பெண் வேடமிட்டு காத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் படுகாயமடைந்த அன்பழகனை, வேலூர் அரசு பென்ட்லெண்ட் மருத்துவமனையில் சேர்த்தனர்.

Related Stories: