நிலங்களில் கழிவுநீர் கலப்பு புகார் எதிரொலி: தனியார் பால் பண்ணையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே கர்லம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பால் பண்ணை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பால் பண்ணையிலிருந்து கழிவுநீர் அப்பகுதியில் உள்ள ஏரி, விளை நிலங்களில் கலப்பதாக கர்லம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜ்குமார்(35) பால் பண்ணைக்கு சென்று அங்குள்ள அலுவலர்களிடம் புகார் செய்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் அவர் தாக்கப்பட்டு காயமடைந்தார். இதனால், விவசாயிகள் பால் பண்ணையை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து, தகவலறிந்த வருவாய்த்துறையினர் நேற்று  பால் பண்ணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பால்பண்ணையில் கழிவுநீர் முறையாக சேமித்து ஏற்பதாகவும், விவசாய நிலங்களுக்கு கலப்பதில்லை என்றும் ஆய்வில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், நிர்வாகம் சார்பில் கழிவுநீர் முறையாக சேமித்து வாகனங்களில் எடுத்துச் செல்வதாகவும், இதனால் விவசாயிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

Related Stories: