வாணியன்சத்திரம் கிராமத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ பங்கேற்பு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே எல்லாபுரம் மத்திய ஒன்றியத்தில் உள்ள வாணியன்சத்திரம் கிராமத்தில் ரூ3.20 செலவில் அமைக்கப்பட்ட 100 கே.வி திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ கலந்துகொண்டு டிரான்ஸ்பார்மரை இயக்கி வைத்தார். அப்போது, `இனிமேல் இந்த பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படாது’ என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், குருவாயல் கிராமத்தில் குடிநீர் பிரச்னை இருப்பதால் புதிதாக குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து ரூ16 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ பங்கேற்று பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். விழாவில், எல்லாபுரம் மத்திய ஒன்றிய செயலாளர் தங்கம் முரளி, பொறுப்பு குழு உறுப்பினர் குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

More
>