சிப்ஸ் கடையில் திடீர் தீ விபத்து

திருத்தணி: திருத்தணி சன்னதி தெருவில் சுரேந்திரன்(37) என்பவர் சிப்ஸ் மற்றும் வேர்க்கடலை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அதற்காக என்.எஸ்.சி.போஸ் சாலையில் வாடகைக்கு குடோன் எடுத்து ஸ்நாக்ஸ் தயாரித்து வருகிறார். இந்நிலையில், கடை ஊழியர்கள் சரத்குமார்(25), யுவனேஷ்(24) ஆகியோர் நேற்று இரவு வேர்க்கடலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக எண்ணையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த திருத்தணி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் சுமார் ₹50 ஆயிரம் பொருட்கள் எரிந்து சாம்பலானது.

Related Stories:

More
>