ஏடிஎம் மையம் உடைப்பு: போதை ஆசாமி கைது

பூந்தமல்லி: அய்யப்பன்தாங்கல் பஸ் டெப்போ பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஏடிஎம் மையத்திற்குள் பணம் எடுக்க வாடிக்கையாளர் ஒருவர் சென்றார். அப்போது, ஏடிஎம் மையத்திற்குள் ஒருவர் குடிபோதையில் படுத்திருந்தார். இதையடுத்து அந்த நபரை பணம் எடுக்கச் சென்றவர் வெளியே வருமாறு கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, போதையில் இருந்தவர் ஆவேசமாக கண்ணாடி கதவை வேகமாக திறந்து வெளியே வர முயன்றபோது கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கி விழுந்தது. அக்கம் பக்கத்தினர் அந்த நபரை மடக்கிப் பிடித்து போரூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அய்யப்பன்தாங்கலை சேர்ந்த கணேசன்(29), குடிபோதையில் ஏடிஎம் மையத்திற்கு சென்று படுத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories:

More
>