பிச்சாட்டூர் ஏரியில் இருந்து சோதனை ஓட்டத்துக்காக 10 நிமிடம் தண்ணீர் திறப்பு

ஊத்துக்கோட்டை: பிச்சாட்டூர் ஏரியில் இருந்து சோதனை ஓட்டத்துக்காக 10 நிமிடம் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆந்திராவில் தொடர்ந்து மழை பெய்ததால் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள ஆந்திர மாநிலமான நாகலாபுரம், நந்தனம், பிச்சாட்டூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பிச்சாட்டூர் ஏரி நிரம்பியது. இதன் முழு கொள்ளளவு 281 மில்லியன் கன அடியில் தற்போது 278 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

தொடர்ந்து 280 மில்லியன் கன அடி நீர்வரத்து உள்ளதால் ஏரியில் இருந்து நேற்று முன்தினம் 280 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் சோதனை ஓட்டம் அடிப்படையில் ஒரு மதகு வழியாக வினாடிக்கு 200 கனஅடி வீதம் 10 நிமிடம் தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் மதகு மூடப்பட்டது. `ஆந்திர பகுதியில் தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே மீண்டும் திறக்கப்படும்’ என்று ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: