கோயில்களில் நயன்தாரா வேண்டுதல்

சென்னை: நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். அவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். தற்போது விக்னேஷ் சிவன் தயாரித்து இயக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோருடன் நயன்தாரா நடித்து வருகிறார். ரஜினிகாந்துடன் அவர் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படம் வரும் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இந்தியில் அட்லி இயக்கும் ‘லயன்’ படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் நயன்தாரா மும்பை சென்றார்.

அப்போது அவரும், விக்னேஷ் சிவனும் மகாராஷ்டிராவில் இருக்கும் சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்று வழிபட்டனர். பிறகு மும்பையிலுள்ள சித்தி விநாயகர் கோயில், மகாலட்சுமி கோயில், மும்பைதேவி கோயில் சென்று சாமி கும்பிட்டனர். அந்த போட்டோக்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related Stories:

More
>