சொல்லிட்டாங்க...

அரசியலில் பெண்கள் முழு அதிகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. உ.பி.யில் பெண்கள் போட்டியிட 40% வாய்ப்பு அளிக்கப்படும்.

- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசின் கலால், சுங்க வரி விதிப்பு முறைகளே முக்கிய காரணம்.

- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 45 ஆகவும், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 50 ஆகவும் உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

- பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

அதிமுக ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இதை கண்டு அதிமுகவினர் அஞ்ச மாட்டார்கள்.

- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

Related Stories:

More
>