ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்: மும்பையில் திறப்பு

மும்பை:  மத்திய ரயில்வேயில் பயன்படுத்தப்படாத பழைய ரயில் பெட்டிகளை  ஓட்டல்களாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்கான டெண்டர்கள் விடப்பட்டு வருகின்றன. இந்த ஒட்டல்கள்  24 மணி நேரமும் இயங்கும். இதன் முதல் கட்டமாக, நேற்று முன்தினம் மாலை மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ்  ரயில் முனையத்தில், பழைய ரயில் பெட்டியால் உருவாக்கப்பட்ட ஓட்டல் திறக்கப்பட்டது. இதில், ஒரே நேரத்தில் 40 பேர்  அமர்ந்து சாப்பிட முடியும். இந்த ரயில் பெட்டி ஓட்டலில் 10 டேபிள்கள் போடப்பட்டுள்ளன.

இது,  புறநகர் ரயில் பெட்டியை போன்று தத்ரூபமாக வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதில், சைவம், அசைவ உணவுகள் கிடைக்கும். வடபாவ், டீ, பழரசம் போன்றவையும் விற்கப்படுகிறது.  இதே போன்ற ரயில் பெட்டி  ஓட்டல்களை மும்பையின் லோக்மான்ய திலக் முனையம், கல்யாண் மற்றும் போரிவலியிலும் அமைக்க  திட்டமிடப்பட்டு உள்ளதாக மத்திய ரயில்வே மூத்த அதிகாரி தெரிவித்தார். 

Related Stories:

More
>