கொஞ்சம் குடிப்பதால் ஒன்னும் ஆகி விடாது: பெண் எம்எல்ஏ கலக்கல்

ஜோத்பூர்: ராஜஸ்தானில் எம்எல்ஏ.வும் அவரது கணவரும் காவல் நிலையத்தில் அமர்ந்து கொண்டு, `கொஞ்சம் போல குடிப்பதால் என்னாக போகுது...’ என்ற ரீதியில் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஷெர்கர்க் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மீரா கன்வார். இவரது சகோதரரின் மகன் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதால், போலீசார் அவரது வாகனத்தை பறிமுதல் செய்து கைது செய்தனர். தகவல் அறிந்து காவல் நிலையம் சென்ற எம்எல்ஏ.வும் அவரது கணவர் உமெத் சிங்கும் அங்கு தரையில் அமர்ந்து கொண்டு உறவினரையும், வாகனத்தையும் விடுவிக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, போலீசாரிடம் எம்எல்ஏ, ``ஊர்லா எல்லா சின்ன பசுங்களும் தான் குடிக்கிறாங்க... என் அண்ணன் மகன் கொஞ்சம் குடித்ததால் ஒன்னும் ஆகி விடாது...? நீங்களும் (போலீசார்) குடித்து விட்டு எம்எல்ஏ.வான என் முன்னாலேயே அலட்சியமாக பேசுறீங்களா...’ என்று கத்தினார். இறுதியில், பெண் எம்எல்ஏ.வும் அவரது கணவரும் அடித்த லூட்டி தாங்காமல்,  அவர்களின் உறவினரையும், வாகனத்தையும் போலீசார் விடுவித்தனர். பெண் எம்எல்ஏ.வின், இந்த ‘கலக்கல் வீடியோ’ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories:

More
>