ஒன்றிய ஊழியர்களுக்கு உற்பத்தி சாரா போனஸ்: துணை ராணுவத்துக்கும் கிடைக்கும்

புதுடெல்லி: ஒன்றிய அரசு பணியாளர்களில் குரூப் சி மற்றும் குரூப் பி பிரிவில் கெஜடட் அல்லாத, உற்பத்தி சார்ந்த போனஸ் திட்டத்தின் கீழ் வராதவர்களுக்கான 2020-21ம் நிதியாண்டிற்கான உற்பத்தி திறன் சாராத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாத சம்பள உச்சவரம்பு ரூ.7000 என்ற கணக்கீட்டின் அடிப்படையில் 30 நாட்களுக்கான ஊதியம் போனசாக வழங்கப்படும்,’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போனஸ் துணை ராணுவப்படை வீரர்கள், ஆயுதப் படை வீரர்களுக்கும் வழங்கப்படும். 31-3-2021 வரை பணியில் இருந்த மற்றும் 2020-21 ஆண்டில் குறைந்தது 6 மாதங்கள் வரை தொடர்ச்சியாக பணியாற்றிய ஊழியர்கள் மட்டுமே தற்காலிக போனஸ் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.

Related Stories:

More
>