2வது டோஸ் தடுப்பூசியை சீக்கிரமாக போடுங்கள்: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ஆலோசனை

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இதுவரை 99 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களில் இது 100 கோடி டோசை எட்ட உள்ளது. இந்நிலையில், ஒன்றிய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், காணொலி மூலமாக மாநில சுகாதார செயலாளர்களுடன் தடுப்பூசி போடும் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது அவர்,  ‘நாடு முழுவதும் போடப்பட்ட தடுப்பூசியின் எண்ணிக்கை 100 கோடி டோசை ெநருங்குகிறது. பல மாநிலங்களில் இன்னும் அதிகப்படியானோர் 2வது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை. எனவே, அனைத்து மாநிலங்களும் 2வது டோஸ் தடுப்பூசி முகாமை தீவிரப்படுத்த வேண்டும்,’ என்று கூறினார்.

* இந்தியாவில் நேற்று கடந்த 231 நாட்களில் இல்லாத அளவுக்கு மிக குறைவாக 13,058 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 3,40,94,373 ஆக உயர்ந்துள்ளது.

* புதியதாக 164 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம், மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 52 ஆயிரத்து 454 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: