பிசினஸ் பண்ண இப்படியும் ஒரு வழி இருக்கு; டிக்டாக்கில் மனித எலும்பை கூவிக்கூவி விற்கும் இளைஞர்

நியூயார்க்:அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த 21 வயதாகும் ஜான் பிச்சாயா பெர்ரிதான் அந்த நபர். இவர் மனித எலும்புகளை விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். தனது வீட்டிலேயே விதவிதமான மனித எலும்புகளை அடுக்கி வைத்திருக்கிறார். மண்டை ஓடு, கை, கால், விரல், இடுப்பு, முதுகெலும்பு என எல்லா விதமான எலும்புகளையும் வைத்துள்ளார். பச்சிளம் குழந்தையின் எலும்புக்கூட்டை கூட வைத்திருக்கிறார். இவற்றைத்தான் தினமும் டிக்டாக்கில் விற்கிறார். ஒவ்வொரு எலும்பையும் காட்டி அதன் அறிவியல்பூர்வ தகவல்களை சொல்கிறார். அதற்கான விலையையும் குறிப்பிடுகிறார்.  இந்த டிக்டாக் வீடியோக்களை பிற சமூக வலைதளங்களிலும் பரப்பி விடுகிறார்.

இவருக்கு 5 லட்சம் பாலோயர்கள் உள்ளனர். அதோடு, டிக்டாக்கில் இப்படி ஒரு பிசினஸ் செய்வது எந்த வகையில் நியாயம் எனவும் சிலர் கேள்வி கேட்கின்றனர். அதற்கு பெர்ரி, ‘‘டாக்டர்கள், எலும்பியல் நிபுணர்கள் தான் பெரும்பாலும் என வாடிக்கையாளர்களாக உள்ளனர். அவர்கள் மருத்துவ ஆய்வு மற்றும் பாடம் கற்பிக்க என்னிடமிருந்து எலும்புகளை வாங்கிச் செல்கின்றனர். மற்றவர்கள் எனது வீடியோ மூலம் எலும்பியல் குறித்த அறிவியல்பூர்வமான தகவல்களை தெரிந்து கொள்கின்றனர்,’’ என்றார். இவரிடம் ரூ.1000ல் இருந்து ரூ.5 லட்சம் வரையிலான எலும்புகள் விற்பனைக்கு உள்ளன.

Related Stories: