4 கண், 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

சென்னை: திருத்தணி அடுத்த காஞ்சிப்பாடி கிராமம் இருளர் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி. விவசாயி. இவர், தனது வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார். இவரது வீட்டில் உள்ள மாடு நேற்று கன்று ஈன்றது. அதற்கு இரண்டு தலையுடன் 4 கண்கள் இருந்ததால் இதனை கண்ட குடும்பத்தினர் ஆச்சர்யம் அடைந்தனர்.  ஆனால் 4 கால்கள் மட்டுமே உள்ளது. கன்றுக்குட்டிக்கு தாயிடம் தானாக சென்று பால்குடிக்க முடியவில்லை என்பதால், பாட்டிலில் பிடித்து வாயில் ஊற்றினர்.

ஆனால், ஒரு வாய் வழியாக செல்லும் பால் உடலுக்குள் செல்லாமல் மற்றொரு வாய் வழியாக வெளியே வந்துவிடுகிறது. இதனால், பால் குடிக்க முடியாமல் கன்றுக்குட்டி தவிப்பது பரிதாபமாக உள்ளது. இதனிடையே இரண்டு தலையுடன் கன்றுக்குட்டி பிறந்துள்ள தகவல் கிடைத்ததும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் இருளர் காலனியில் உள்ள விவசாயியின் வீட்டின் முன் குவிந்து கன்றை ஆச்சரியத்துடன் பார்த்தனர். தகவலறிந்த கால்நடை மருத்துவர்கள் வந்து கன்றுக்குட்டி உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: